என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
அகில இந்திய பா.ஜ.க. தலைவர்களோடு போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயம்
அகில இந்திய பா.ஜ.க. தலைவர்களோடுஅமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
புதுச்சேரி:
பா.ஜ.க. பொதுமக்களிடம் இருந்து நுண்ணிய (மைக்ரோ) நன்கொடை என்ற தலைப்பில் நிதி திரட்டி வருகிறது.
கட்சியின் வளர்ச்சி நிதியாக நாடு முழுவதும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஒரு மாதத்துக்கு நன்கொடையை பெற்று வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து பா.ஜ.க. நிர்வாகிகள் இதற்கான நன்கொடையை பெற்று வருகின்றனர். ரூ.5, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.ஆயிரம் என 5 பிரிவில் நன்கொடை பெறப்படுகிறது. இந்த நன்கொடையை அந்தந்த மாநிலங்களில் பெற்றுதர பரிந்துரை செய்தவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் அதிக அளவில் பரிந்துரை செய்தவர்களில் அகில இந்திய அளவில் குஜராத் எம்.பி. பாட்டில் முதலிடத்தில் உள்ளார். பா.ஜ.க. இளைஞர் அமைப்பு
2-ம் இடத்திலும், மத்தியபிரதேச எம்.பி. கஜேந்திரசிங் படேல் 3-ம் இடத்திலும் உள்ளனர்.
சுமார் 22 ஆயிரம் பேரை பரிந்துரை செய்து புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் 4-ம் இடத்தில் உள்ளார். இந்த நன்கொடை பெறுவது நிறைவடைகிறது. இந்நிலையில் அமைச்சர் நமச்சிவாயமும், அவரின் ஆதரவாளர்களும் இன்னும் ஒரு படி மேலே செல்வதற்கு தொண்டர்கள், நெருக்கமானவர்களிடம் நன்கொடை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அகில இந்திய அளவிலும், பா.ஜ.க. ஆளும் பெரிய மாநிலங்களோடும் தென்மாநிலங்களில் சிறிய யூனியன் பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுவது கட்சி தலைவர்களின் பார்வையை புதுவை பக்கம் திருப்பியுள்ளது.
Next Story






