என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
குடிபோதையில் தகராறு செய்தவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேர்தல் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து குடிபோதையில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதியில் தேர்தல்பணி நடைபெறுகிறது. வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் வத்திராயிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் சங்கரமூர்த்தி தேர்தல் அலுவலகத்திற்கு வந்து அத்துமீறி நுழைந்து குடிபோதையில் தகராறு செய்தார்.
பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் அலுவலருமான ரவிசங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரமூர்த்தியை கைது செய்தனர்.
Next Story






