என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    கூடுவாஞ்சேரி நகராட்சியில் அ.தி.மு.க. சார்பில் கணவன், மனைவி, மகன் கவுன்சிலர் பதவிக்கு போட்டி

    கூடுவாஞ்சேரி நகராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும நகரமன்ற கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் களத்தில் உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க உள்ளது.

    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரி நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மாவட்ட துணை செயலாளர் டி.சீனிவாசன் 24 வது வார்டில் கவுன்சிலர் வேட்பாளராக களத்தில் உள்ளார்.

    இவரது மனைவி எஸ்.ச சிகலா 23-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.சார்பில் போட்டியிடுகின்றார். இதேபோல் இவர்களது மகனும் கூடுவாஞ்சேரி அ.தி.மு.க நகர செயலாளருமான எஸ்.டி.பிரசாத் 25-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

    கணவன், மனைவி, மகன் என 3 பேரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும நகரமன்ற கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் களத்தில் உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க உள்ளது.

    Next Story
    ×