என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
தேர்தல் களத்தை கலக்கும் 319 பேர்
81 வார்டுகளுக்கு 319 பேர் போட்டியில் குதித்துள்ளனர்.
பெரம்பலூர்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 125 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று 13 பேர் வாபஸ் பெற்றனர்.
இறுதியாக, 112 பேர் போட்டியிடுகின்றனர். பேரூராட்சிகளில் குரும்பலூரில் 3 பேர் வாபஸ் பெற 51 பேரும், அரும்பாவூரில் 3 பேர் வாபஸ் பெற 45 பேரும், லப்பைக்குடிகாட்டில் 17 பேர் வாபஸ் பெற 80 பேரும், பூலாம்பாடியில் 3 பேர் வாபஸ் பெற 33 பேரும் போட்டியிடுகின்றனர்.
பூலாம்பாடி பேரூராட்சி யில் 6-வது வார்டில் தி.மு.க.வை சேர்ந்த மாணிக்கம், 11-வது வார்டில் தி.மு.க.வை சேர்ந்த பூங்கொடி ஆகியோர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால், இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்ப ட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் முழுவரும் உள்ள 81 வார்டுகளில் 360 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 39 பேர் வாபஸ் பெற்றனர். 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் 319 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
Next Story






