என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்
கண்டராதித்தன் செம்பியன் மாதேவி ஏரியை தூர்வார கோரிக்கை
கண்டராதித்தன் செம்பியன் மாதேவி ஏரியை தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக ஆர்வலர் வரதராஜன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் திருமானூர் ஒன்றிய அலுவலகத்திற்குஅருகில் பள்ளி குழந்தைகள் பொதுமக்களுக்கு நடை பாதை அமைக்க வேண்டும். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனி வேல்தியாகராஜன் அறிவுறுத்தலின்படி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் மொழியை பயன்படுத்த வேண்டும்.
அரசு கண்டராதித்தன் செம்பியன் மாதேவி ஏரியை ஆழப்படுத்த ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்க வேண்டும். கண்டராதித்த ஏரி கரையில் இலந்தை கூடம் வரை தார்சாலை அமைக்கவேண்டும்.
திருமானூரிலிருந்து தா.பழூர்வரை டெல்டா பகுதிகளில் நெல் அறுவடை துவங்கி விட்டதால் நடமாடும் நெல் கொள்முதல் அமைக்க வேண்டும்.
திருமானூர் பேருந்து நிலையத்தில் நிழல் குடை அமைக்க வேண்டும், திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவு வாயிலில் இருந்து மருத்துவமனை வரை செல்ல மின்விளக்கு மற்றும் தார் சாலை அமைத்திட வேண்டும்.
திருமானூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காவல்துறையால் அமைக்கப்பட வேண்டும் போன்ற 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ராமகிருஷ்ணன், துரை, சசிகுமார், பவுல்ராஜ், மற்றும் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story