என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குநர் ஆய்வு

    காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குநர் ஆய்வு செய்தார்.
    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓச்சேரி, மாண்டூர், சிறுகரும்பூர், உள்ளிட்ட ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,  ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்சி திட்ட பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி நேற்று ஆய்வு மேற்கொண்டார். 

    அப்போது மாமண்டூர் ஊராட்சியில் நடைபெற்று வருகின்ற பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், மற்றும் ரூ.8.75- லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட்  சாலை திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

    சிமெண்ட் சாலையின் உறுதி தன்மமையை ஆய்வுக்கு அனுப்பி வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் கிடப்பில் உள்ள பணிகளை உடனடியாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். 

    இதனையடுத்து சிறுகரும்பூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணிகளையும் ஆய்வு செய்தார். 

    மேலும் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  29- ஊராட்சிகளிலும், கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    Next Story
    ×