search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரி செலுத்தாத கடைக்கு ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் பஞ்சாயத்து ஊழியர்கள் சீல் வைத்த காட்சி.
    X
    வரி செலுத்தாத கடைக்கு ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் பஞ்சாயத்து ஊழியர்கள் சீல் வைத்த காட்சி.

    ரூ.2 லட்சம் வரி செலுத்தாத கடைக்கு சீல்- ஆணையர் நடவடிக்கை

    வரி செலுத்தாத கடைக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சீல் வைத்தார்.
    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வரி பாக்கி சுமார் ரூ.3 லட்சம் உள்ளது.  சொத்து மற்றும் வீட்டு வரி செலுத்தாமல் சுமார் ரூ.2 கோடி பாக்கி இருந்து வருகிறது. மேலும் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வணிக வளாகங்களில் வாடகை பாக்கி ரூ. 13 லட்சம் உள்ளது. இதுபோல் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சுமார் ரூ.5 கோடிக்கு மேல் வரிவசூல் செய்ய வேண்டியுள்ளது.

    தீவிர வரி வசூலை பெற்று பாகூர் பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களில் வளர்ச்சித் திட்ட பணிக்கு செலவு செய்யவும், புதிய திட்டங்களை கொண்டு வரவும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் முகாம்கள் அமைத்து வரி வசூல் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை முடுக்கிவிட்டுள்ளார். வரி பாக்கியை வருகிற மார்ச் மாதத்திற்குள் வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கன்னியகோவிலில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வணிக வளாகத்தில் ரூ. 2 லட்சத்துக்கு மேல் வரி செலுத்தாமல் இருந்த கடைக்கு ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான ஊழியர்கள் சீல் வைத்தனர். மேலும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நலத்திட்ட பணிகள் தொடங்க குடிநீர் மற்றும் வீட்டுவரியை பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் உடனுக்குடன் செலுத்தமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Next Story
    ×