search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு நேர்மையாக நடைபெற காவல் உயர் அதிகாரிகளை மாற்ற வேண்டும்

    மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு நேர்மையாக நடைபெற காவல் உயர் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் பொதுச் செயலர் தெரிவித்தார்.

    அரியலூர்:

    மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால் இங்குள்ள காவல் உயர் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் பொதுச் செயலர் நிதிதிரிபாதி தெரிவித்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி லாவண்யாவின் பெற்றோரை, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் பொது செயலர் நிதிதிரிபாதி சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், லாவண்யா பெற்றோரை சந்தித்த பிறகு தான் தெரிகிறது மாணவியின் தற்கொலையில் சதி இருக்கிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாவண்யா தனது சித்தியுடன் மகிழ்ச்சியாக சுற்றுலா சென்றுள்ளார். அப்படி  இருக்கையில் லாவண்யா தற்கொலை செய்து கொண்டிருப்பாரா. ஆனால் சித்தியின் கொடுமையால் தான் லாவண்யா தற்கொலை செய்துள்ளார் என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.

    நான் இங்கு பார்த்து விசாரிக்கையில், விடுதி வார்டன் கொடுமையால்தான் லாவண்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

    காவல் துறையின் விசாரணை திருப்பதி அளிக்காததால் தான்,  நீதி மன்றமே சி.பி.ஐ. விசார ணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் இந்த விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால் இங்குள்ள காவல் உயர் அதிகாரிகளை மாற்ற வேண்டும். லாவண்யா தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தொடர்ந்து போராடும் என்றார்.
    Next Story
    ×