என் மலர்
உள்ளூர் செய்திகள்

அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
நினைவு தினம்: அண்ணா சிலைக்கு ரங்கசாமி மாலை
அண்ணா நினைவு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுவை மாநில தி.மு.க.வினர் எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் ஏ.எப்.டி. திடலில் இருந்து மவுன ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி.சிவகுமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில் குமார், துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், செந்தில்குமார், சண்.குமார வேல், பெல்லாரி கலிய பெருமாள், தொகுதி பொறுப் பாளர்கள் கோபால், முகிலன், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், ஜே.வி.எஸ். சரவணன் என்ற ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், சக்திவேல், வேலன், அருள்செல்வி, பழனி, பிரபாகரன், சத்தியா ஆறுமுகம், பாஸ்கர், தொகுதி செயலாளர்கள் ராமசாமி, முத்துவேல், சவுரிராஜன், சிவகுமார், தியாகராஜன், தங்கவேல், கோதண்டம், ஆர்.சக்திவேல், திராவிடமணி, ஜி.சக்திவேல், சீதாரமன், ராஜாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், கலிய கார்த்திகேயன், அணிகளின் அமைப்பாளர்கள் முகமது யூனூஸ், மணிமாறன், அண்ணா அடைக்கலம், விஜயராஜ், மதனா, தேன்மொழி பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, பாண்டுராசன், இளஞ்செழிய பாண்டியன், செல்வநாதன், கோதண்டராமன், லோக கணேசன், அகஸ்டின் சித்து, அருண்குமார், பூபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், உப்பளத்தில் உள்ள தலைமைக் அலுவலகத்தில் அண்ணா உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், பெரியசாமி, ராஜாராமன், இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, அன்பானந்தம், சின்ன துரை, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணை செயலாளர்கள் எம்.ஏ.கே.கருணாநிதி, அன்பழக உடையார், கணேசன், உமா, மூர்த்தி, ஜெயசேரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மணவாளன், குமுதன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அண்ணா நினைவு நாளையொட்டி மாநிலம் முழுவதும் அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அண்ணா உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஓம்சக்தி சேகர் தலைமையில் நிர்வாகிகள் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பேராசிரி யர் ராமதாஸ், இணை செயலாளர் காசிநாதன், துணை செயலாளர்கள் கோவிந்தம்மாள், நாகமணி, சதாசிவம், கணேசன், பொருளாளர் சங்கர், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ, ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், மாசிலா குப்புசாமி, இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், மாணவரணி செயலாளர் புகழ்பாரி, மகளிரணி செயலாளர் வெரோனிகா, பாசறை தலைவர் ராதாகிருஷ்ணன் உடையார், தொகுதி செயலாளர்கள் வேலவன், வெங்கடேசன், கமல்தாஸ், கோபால், ஆனந்தன், நகர செயலாளர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதியநீதி கட்சி சார்பில் அண்ணாசிலைக்கு மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், நடராஜன், தேவநாதன், கேசவன், வக்கீல்கள் ராஜேந்திரன், இளங்கோ, மகேஷ், வேல்பாரி, மோகன், சேகர், கோவிந்தராஜ், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கெண்டனர்.
Next Story






