என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்புலன்ஸ் சேவையை  லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
    X
    ஆம்புலன்ஸ் சேவையை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் வசதி லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஏற்பாடு

    கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் வசதியை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்து கொடுத்தார்.
    புதுச்சேரி: 

    ஏம்பலம் தொகுதி கரிக்கலாம்பாக்கத்தில் அரசு சமுதாய மருத்துவமனை இருந்து வருகிறது. 

    இந்த ஆஸ்பத்திரிக்கு கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள  50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெற்று வருகின்றனர். 

    ஆனால், அவசர தேவைக்கு ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே இருந்து வருகிறது இதனால் அடிக்கடி ஆம்புலன்ஸ் இல்லாததால் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது.

    எனவே, கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் ஏற்பாடு செய்தார். 

    அதன்படி ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.36 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் தலைமை தாங்கி கரிக்கலாம்பாக்கம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த  நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை டாக்டர் திருமலை சங்கர், ரோட்டரி சங்க நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×