என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க-தி.மு.க.
உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க-தி.மு.க. புறக்கணித்தன.
புதுச்சேரி:
புதுவையில் 10 ஆண்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவால் தேர்தல் நிறுத்தப்பட்டது. இடஒதுக்கீடு அளிக்க சசிதரன் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக ரெட்டியார்பாளையத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்துக்கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் ராய்பிதாமஸ் தலைமை வகித்தார்.
தேர்தல் துறை அதிகாரிகள் வஞ்சுனவள்ளி, ஆலோசகர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காங்கிரஸ் பெத்தபெருமாள், அ.தி.மு.க. மோகன்தாஸ், இந்திய கம்யூனிஸ்டு கீதநாதன், மார்க்சிஸ்டு நடராஜன் உள்பட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., எதிர்கட்சியான தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணத்தை புறக்கணித்தன. கூட்டத்தில், இடஒதுக்கீடு பிரச்சினையை 2 மாதத்தில் முடித்து தேர்தலை நடத்த வேண்டும். தமிழகம் போல இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டும் என அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையர் பேசும்போது, கட்சி நிர்வாகிகளின் ஆலோ சனைகள் கருத்தில் கொள்ளப்படும். விரைவில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
தி.மு.க. தொடர்ந்த வழக்கு வருகிற 7-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இதன் முடிவை பொறுத்து புதுவையில் உள்ளாட்சி தேர்தல் சூடு பிடிக்கும் என தெரிகிறது.
Next Story






