என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கள்ளக்குறிச்சி அருகே வாகனம் மோதி நெல் வியாபாரி பலி

    கள்ளக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நெல் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேட்டை தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 47) நெல் வியாபாரி, இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் தியாகதுருகத்திலிருந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வீரமங்கலத்திற்கு நெல் வியாபாரத்துக்கு சென்றார். மீண்டும் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக தியாகதுருகம் நோக்கி சென்றார்.

    அப்போது திம்மலை பிரிவு சாலை அருகே சென்றபோது தனக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இதுகுறித்து தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் விரைந்து சென்று உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார். இதுகுறித்து சங்கர் மனைவி அம்சா (45) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது அமோதிய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×