என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சீல்
    X
    சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சீல்

    சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சீல்

    சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
    சங்கராபுரம்:

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்கள் விளம்பர பேனர்களை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×