என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மின்துறை ஊழியர்கள் போராட்டம் அதிகாரிகளுடன் ரங்கசாமி ஆலோசனை
மின்துறை ஊழியர்கள் போராட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினர்
புதுச்சேரி:
புதுவை மின்துறை ஊழியர்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கும் என அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலெக்டர் வல்லவன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அத்தியாவசிய பட்டியலில் இடம் பெற்றுள்ள மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை தடுக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஆலோசித்தார். ஏற்கனவே மின்துறை தலைவர் சண்முகம், மின்துறை தலைமை அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதற்கான உத்தரவை கலெக்டர் பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
Next Story






