என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கொரோனாவுக்கு 3 பேர் பலி
புதுவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் 30-ந் தேதி ஆயிரத்து 682 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 380, காரைக்காலில் 103, ஏனாமில் 15, மாகியில் 6 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 110, காரைக்காலில் 30, ஏனாமில் 12, மாகியில் 9 பேர் என 161 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் ஆயிரத்து 393, காரைக்காலில் 354, ஏனாமில் 62, மாகியில் 19 பேர் என ஆயிரத்து 828 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 251 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 620 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 6 ஆயிரத்து 334, காரைக்காலில் 2 ஆயிரத்து 345, ஏனாமில் 798, மாகியில் 62 பேர் என 9 ஆயிரத்து 539 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இப்போது 9 ஆயிரத்து 700 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை சாரத்தை சேர்ந்த 82 வயது மூதாட்டி, குறிஞ்சி நகரை சேர்ந்த 72 வயது முதியவர், காரைக்காலை சேர்ந்த 65 வயது பெண் என 3 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 931 ஆக உயர்ந்துள் ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 33 ஆயிரத்து 829 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Next Story






