என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
பெரம்பலூர் மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஓட்டுப்போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பாக பரிசு பொருட்கள் போன்றவற்றை விநியோகிக்க கூடாது என தேர்தல் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்க பணம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பரிசு பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தர விட்டள்ளது. இந்த தேர்தல் விதிமுறையை மீறுவோர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சிக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மாயக்கிருஷ்ணன், வேப்பந்தட்டை மண்டல துணை தாசில்தார் தங்கராசு, பெரம்பலூர் தனி தாசில்தார் (முத்திரைத்தாள்) பழனிச் செல்வன் ஆகிய மூன்று பேர் தலைமையில் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
குரும்பலூர் பேரூராட்சிக்கு ஆலத்தூர் மண்டல துணை தாசில்தார் செந்தில் முருகன், ஆலத்தூர் (தேர்தல்) துணை தாசில்தார் கதிர், பெரம்பலூர் கலால் அலுவலக மேற்பார்வை அலுவலர் பொன்னுதுரை ஆகிய 3 பேர் தலைமையில் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
அரும்பாவூர் பேரூராட்சிக்கு பெரம்பலூர் கோட்ட கலால் அலுவலர் கோவிந்தம்மாள். பறக்கும்படை துணை தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார் (நிலம் கையகப்படுத்தல்) கருணாகரன் ஆகிய 3 பேர் தலைமையில் 3 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
பூலாம்பாடி பேரூராட்சிக்கு பெரம்பலூர் அரசு கேபிள் டி.வி. தாசில்தார் நூர்ஜஹான், டாஸ்மாக் துணை மேலாளர் பாரதி வளவன், வேப்பந்தட்டை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சின்னதுரை ஆகிய ஆகிய 3 பேர் தலைமையில் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
லெப்பைகுடிகாடு பேரூ ராட்சிக்கு பெரம்பலூர் பறக்கும்படை தனி தாசில்தார் சித்ரா, குன்னம் சமூக பாது காப்பு திட்ட தாசில்தார் துரைராஜ், பெரம்பலூர் (நிலம் கையகப்படுத்துதல்) அருளானந்தம் ஆகிய 3 பேர் தலைமையில் 3 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 15 பறக்கும்படை இக்குழுவினர் நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story