என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கொரோனாவுக்கு 5 பேர் பலி
Byமாலை மலர்30 Jan 2022 1:50 PM IST (Updated: 30 Jan 2022 1:50 PM IST)
புதுவையில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். இதில் புதிதாக 923 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 29-ந் தேதி 3177 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் புதுவையில் 650 பேர், காரைக்காலில் 18 பேர், ஏனாமில் 72 பேர், மாகியில் 15 பேர் என மொத்தம் 923 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஜிப்மர் மருத்துவ மனையில் 36 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 28 பேரும், அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 24 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 40 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் 189 பேரும், வீட்டு தனிமையில் 10,838 பேர் என ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் 11, 027 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 30-ந் தேதி ஒரு நாளில் 2433 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 792 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே, புதுசாரத்தை சேர்ந்த 67 வயது மூதாட்டி, முருங்கபாக்கத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி, மங்கலத்தை சேர்ந்த 50 வயதுடைய ஆண், காரைக்காலை சேர்ந்த 65 வயது முதியவர், டி.ஆர். பட்டினத்தை சேர்ந்த 73 வயது முதியவர் என 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் கொரோனாவால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 1928 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Next Story
×