என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
வாழை இலை வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை
உருளையன்பேட்டை அய்யனார் நகரில் கடன் பிரச்சினையால் வாழை இலை வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை அய்யனார்நகர் சந்திர சேகரன் வீதியை சேர்ந்தவர் சின்னதுரை(வயது52). இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், சீனுவாசன் என்ற மகனும் உள்ளனர்.
சின்னதுரை சாரதிநகரில் வாழை இலை கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
இதற்கிடையே சின்னதுரை கடன் பிரச்சினையால் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்வார்.
வழக்கம் போல் சின்னதுரை அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டில் மனைவியிடம் பிரச்சினை செய்தார். பின்னர் சின்னதுரை வெளியே சென்று விட்டார்.
இந்தநிலையில் அவரது மகன் சீனுவாசன் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது கீற்று கொட்டகையில் தந்தை நைலான் கயிற்றால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சின்னதுரை மனைவி வள்ளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






