என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவையில் 1,504 பேருக்கு கொரோனா பாதிப்பு முதியவர் உள்பட 3 பேர் பலி

    புதுவையில் 1,504 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு முதியவர் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 25-ந் தேதி 4,815 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில், 1,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுவையில் 1,060 பேரும், காரைக்காலில் 264 பேரும், ஏனாமில் 149 பேரும், மாகியில் 31 பேரும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 45 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 34 பேரும், அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 21 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 72 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    கடந்த மாதங்களில் கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் கோவிட் கேர் சென்டர்களில் யாரும் அனுமதிக்கப் பட வில்லை. 

    ஆனால் தற்போது தொற்று அதிகமாகி வருவதால் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவோர் எண்ணிக்கையும், கோவிட் கேர் சென்டர்களில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

    தற்போது மருத்துவ மனையில் 233 பேர், வீட்டு தனிமையில் 16,065 பேர் என ஒட்டு மொத்தமாக 16,298 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

    இன்று 1,597 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 56 ஆயிரத்து 758 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இதில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 545 பேர் தொற்றில் இருந்து குண மடைந்துள்ளனர்.

    இதற்கிடையே புதுவை நைனார்மண்டபத்தை சேர்ந்த 76 வயது முதியவர், நெட்டப்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்த 46 வயது ஆண், ஏனாமை சேர்ந்த 51 வயது பெண் ஆகிய 3 பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,915 ஆக உயர்ந்துள்ளது.
    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×