என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  சகோதரர் கொரோனாவால் பாதிப்பு: கடலில் குதித்து முதியவர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியாங்குப்பம் அருகே சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் வேதனையில் முதியவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
  புதுச்சேரி:

  முருங்கப்பாக்கம் மகா லட்சுமி நகர்  வேல்ஸ் கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்திரராஜூ (வயது76). ஏ.எப்.டி. மில்லில் தொழிலாளியாக  பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

   இவர் திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு தனது தம்பி செல்வம் என்பவரை பார்க்க வீராம்பட்டிணம் வந்தார்.

  அப்போது தனது தம்பி செல்வம் கொரோனா தொற்றால் அவதி பட்டு வந்ததை கண்ட சந்திரராஜூ  மன வேதனை அடைந்தார்.

  இதனால் மனவேதனையில் சந்திர ராஜூ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து  வீராம்பட்டிணம் கடலில் குதித்தார். அவரை ராட்சத அலை இழுத்து சென்றதால் கடலில் மூழ்கி இறந்து போனார். 

  இது குறித்து அவரது சகோதரர் செல்வத்தின் மகன் ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×