என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  மாமல்லபுரம் நாட்டிய விழா இன்றுடன் நிறைவடைகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தினமும் மாலையில் பரதநாட்டியம், குச்சிப்புடி, கரகாட்டம், கதக், ஒடிசி, தப்பாட்டம், காவடி, பொய்கால்குதிரை, சிலம்பம், கதகளி என பல மாநில கிராமிய கலாச்சார நடனங்கள் நடத்தப்பட்டது.
  மாமல்லபுரம்:

  மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் கடந்த டிசம்பர் 23-ந்தேதி இந்திய நாட்டிய விழா தொடங்கியது. இதை அமைச்சர்கள் மதிவேந்தன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

  தொடர்ந்து தினமும் மாலையில் பரதநாட்டியம், குச்சிப்புடி, கரகாட்டம், கதக், ஒடிசி, தப்பாட்டம், காவடி, பொய்கால்குதிரை, சிலம்பம், கதகளி என பல மாநில கிராமிய கலாச்சார நடனங்கள் நடத்தப்பட்டது. தினமும் 4 மணி நேரம் விழா நடைபெற்றது.

  நாளை (23-ந்தேதி) வரை நாட்டிய விழா நடத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டிருந்தது. நாளை கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று மாலை 5.15-க்கு நாட்டுப்புற நடனத்துடன் தொடங்கி இரண்டு குழுவின் பரத நாட்டியத்துடன் இரவு 8.15-க்கு இந்திய நாட்டிய விழா நிறைவடைகிறது.
  Next Story
  ×