என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உண்ணாவிரத போராட்டம் நடந்த காட்சி.
    X
    உண்ணாவிரத போராட்டம் நடந்த காட்சி.

    பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு ஊழியர்கள் உண்ணாவிரதம்

    2 மாத சம்பளம் வழங்க கோரி பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி: 

    புதுவை சாலை போக்கு வரத்துக்கழக   அம்பேத்கர் ஊழியர்கள் சங்கத்தினர் 2 மாத சம்பளம், 2 ஆண்டு போனஸ் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 

    போராட்டத்துக்கு பொதுச்செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். போராட்டத்தை அரசு ஊழியர் ஐக்கிய பேரவை பொதுச்செயலாளர் மணீத் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். 

    விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ஐக்கிய பேரவை அமுதவன், மார்க்சிஸ்டு தமிழ்மாநில குழு பெருமாள், சிறை பாண்டியன், சேது செல்வம், குருநாதன்,  சக்திசிவம், நாகமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

    தொழிற்சங்க பொறுப்பாளர்கள் பக்கிரி சாமி, அமிர்தவேல், பூபாலன், கார்த்திமுனுசாமி, முருகன் மற்றும்  பலர் கலந்து கொண்டனர். 

    போராட்டத்தை அரசு ஊழியர் ஐக்கிய பேரவை முதன்மை  செயலாளர் பாவாணன் முடித்து வைக்கிறார்.
    Next Story
    ×