என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறந்த பச்சிளங் குழந்தையை நாய் இழுத்து வந்ததால் பரபரப்பு
    X
    இறந்த பச்சிளங் குழந்தையை நாய் இழுத்து வந்ததால் பரபரப்பு

    தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பச்சிளங் குழந்தையை நாய் இழுத்து வந்ததால் பரபரப்பு

    தருமபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று காலை இறந்த நிலையில் பச்சிளங் குழந்தையின் உடலை ஒரு நாய் கவ்விக்கொண்டு ஓடி வந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று காலை ஒரு நாய் , இறந்த நிலையில் பச்சிளங் குழந்தையின் உடலை கவ்விக்கொண்டு ஓடி வந்தது.

    இதை பார்த்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே நாயை துரத்தி விட்டு குழந்தையை மீட்டு பார்த்தனர். அப்போது குறை பிரசவத்தில் குழந்தை இறந்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×