என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  காலாப்பட்டில் லாரி மோதியதில் தலை நசுங்கி மீன் வியாபாரி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காலாப்பட்டில் லாரி மோதியதில் மீன் வியாபாரி தலை நசுங்கி பலியானார்.
  புதுச்சேரி: 

  புதுவை சின்ன காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது27). இவர் மொத்தமாக மீன் வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு மீன் விற்கும் தொழில் செய்துவந்தார்.  இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தமிழரசனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

  இந்த நிலையில் தமிழரசன் சின்ன காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்தார். அங்குள்ள ஒரு கடை அருகே ஒரு லாரி நிறுத்தப்பட்டு இருந்ததால் அந்த மறை விடத்தில் தமிழரசன் சிறுநீர் கழிக்க சென்றார்.

  அப்போது   தமிழரசன் நிற்பதை கவனிக்காமல் டிரைவர் திடீரென லாரியை ஓட்டினார். இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி தமிழரசன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.  இதனை பார்த்ததும் லாரியை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டி சென்று விட்டார். 

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தமிழரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

  மேலும் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தமிழரசன் மீது மோதிய லாரி மற்றும் அதன் டிரைவரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
  Next Story
  ×