என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பாண்டி மெரினா கடற்கரையில் செல்பி பாயிண்ட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பாண்டி மெரினா கடற்கரையில் செல்பி பாயிண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
  புதுச்சேரி: 

  புதுவை வம்பா கீரப்பாளையம் கலங்கரை விளக்கம் அருகே  கடற்கரை மணல் பரப்பில் பாண்டி மெரினா பீச் 2019-ம் ஆண்டு  தொடங்கப்பட்டது. 

  அங்கு அழகிய பிரெஞ்சு கால கட்டிடக்கலை நயத்துடன் வணிக வளாகம்  கட்டப்பட்டது. அங்கு பல்வேறு விதமான  உணவு அரங்குகள், சுற்றுலா குடில்கள் அமைக் கப்பட்டுள்ளது. இங்கு பயணிகள் கடற்கரையின் அழகை ரசித்துக் கொண்டே உணவருந்த  பிரம்மாண்ட கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளது. 

  குழந்தைகளை மகிழ்விக்க ரெயில், பவுன்சிங் கேசில் விளையாட்டு சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளது. இத னால் இங்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின்  கூட்டம் அலைமோதுகிறது. 

  இங்கு வரும் பயணி களை கவர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தும் பணி தொடங்கியது. இதற்காக  செல்பி பாயிண்டுகள் உரு வாக்கப்பட்டு வருகிறது. இங்கு அழகிய கண்கவர் ஓவியங்கள்   தீட்டப்பட்டு வருகிறது. ஓவியர் ரவி தலைமையிலான  குழுவினர் இயற்கை  காட்சிகள், பறவைகள்,  புதுவையின் சிறப்புகளை உள்ளடக்கிய கண்கவர் ஓவியங்களை தீட்டி வருகின்றனர்.
  Next Story
  ×