என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை- மத்திய மந்திரிக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய மந்திரிக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார்.
  புதுச்சேரி: 

  இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட மத்திய மந்திரிக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு தெரிவித்தார்.

  மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை, புதுவை கவர்னர் தமிழிசை கடந்த 9-ந் தேதி போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கை சிறையில் உள்ள தமிழகம், காரைக்கால் மீனவர்களை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

  பிரதமர் மோடி வழி காட்டுதலின்படி, மத்திய மந்திரி ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.  இதையடுத்து இந்திய மீனவர்களின் விடு தலைக்காக தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆகியோருக்கு கவர்னர் தமிழிசை நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×