என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கொரோனாவுக்கு 31 வயது இளைஞர் பலி
புதுவையில் கொரோனாவுக்கு இளைஞர் பலியானார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் நேற்று 2657 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 974 பேர், காரைக்காலில் 129 பேர், ஏனாமில் 17 பேர், மாகியில் 40 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 133 பேர், வீட்டு தனிமையில் 7469 பேர் என ஒட்டுமொத்தமாக 7602 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று 142 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 31 வயது வாலிபர் உயிரிழந்தார். கொரோனாவின் 2-வது அலையில் நடுத்தர வயதுடைய பலர் உயிரிழந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக உயிரிழப்பு வெகுவாக குறைந்திருந்தது. உயிரிழந்தவர்களும் 65 வயதிற்கு மேற்பட்டவர் களாகவே இருந்தனர்.
இந்த நிலையில் புத்தாண்டிற்கு பிறகு அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். இன்று 31 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளது குறிப்பித்தக்கது.
புதுவையில் இதுவரை 1 லட்சத்து 37 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில 1 லட்சத்து 28 ஆயிரத்து 21 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 1887 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Next Story






