என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
பூஸ்டர் தடுப்பூசி
முன்பதிவு செய்து செலுத்திக்கொள்ளலாம்- அரசு ஆஸ்பத்திரியில் பூஸ்டர் தடுப்பூசி
By
மாலை மலர்13 Jan 2022 2:35 AM GMT (Updated: 13 Jan 2022 2:35 AM GMT)

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் முன்பதிவு செய்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். முன்பதிவு செய்த முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மேற்படிப்பு மையத்தில் (புதுவை அரசு ஆஸ்பத்திரி) நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கி உள்ளது.
இதனை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கருணாநிதி, மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், கொரோனா பொறுப்பு அதிகாரி பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கோவின் இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அவர்களது செல்போன்களில் வரும் குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதைத்தவிர அனைத்து சுகாதார ஊழியர்களும் தங்களுக்கான தடுப்பூசி பூஸ்டர் டோசையும் பெற்றுக்கொள்ளலாம்.
மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த மருத்துவமனையில் தடுப்பூசி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முன்பதிவு செய்த முன்கள பணியாளர்களுக்கும் இங்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story
×