என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இளைஞர்கள் உலகுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்- முதல் அமைச்சர் ரங்கசாமி பேச்சு

    இளைஞர்கள் உலகுக்கு முன்மாதிரியாக தகழ வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
    புதுச்சேரி: 

    தேசிய இளைஞர் தின தொடக்கவிழாவில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    வளங்களை உருவாக்கி, உரிய பங்கை நிர்வாகத்துக்கு செலுத்தி, சேமித்து நல்ல காரணங்களுக்காக மக்களுக்கு பயன் படுத்துவதே நல்ல ஆட்சி. 

    பிரதமர் மோடி நல்லாட்சி யின் அடையாளமாக திகழ்கிறார். இளைஞர்கள் ஆற்றல் மிக்க கருவிகள். அவர்களால் விவேகானந்தர் உலகை மாற்ற விரும்பினார். இளம் இந்தியாவை தட்டி எழுப்பும் ஒரு நிகழ்வாக இந்த விழா புதுவையில் நடைபெறுவது பெருமைக்குரியது. 

    நம் நாட்டின் இளைஞர் களை புதுவையில் சந்திக்க விரும்பினேன். ஆனால், கொரோனா தொற்று பரவலில் இருந்து இளைஞர்களை காப்பது அரசின் கடமை என கருதி காணொலியில் விழா நடக்கிறது. 

    செல்வம், அறிவியல் வணிகம் என பல வழிகளில் நாட்டுக்கு பங்களிக்கலாம். பணம் இல்லாத கல்வி, அறம் இல்லாத செல்வம்,  மனித நேயம் இல்லாத அறிவியல் பயனற்றது மட்டுமல்ல, ஆபத்தானது. 

    தொண்டு,  ஒழுக்கம், மனிதநேயம், நன்னடத்தை ஆகியவை இந்திய இளை ஞர்களுக்கு உள்ள மிகப்பெரும் மதிப்பு. வலிமையான இளைஞர் இந்த குணாதிசயங்களை கொண்டிருக்க வேண்டும். இதற்கு பயிற்சியளிக்கவே திறமையான இளைஞர்கள், நிச்சயமான இளமை என்ற நோக்கத்துக்காகவே இந்த விழா நடத்தப்படுகிறது.

    இளைஞர்களின் வழிகாட்டிகள் பலர் இளமையிலேயே நம்மை விட்டுச்சென்றுவிட்டனர் என கூறுவார்கள். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கை செய்தியை மிக வேகமாக சேர்த்துள்ளனர். ஆதிசங்கரர், மகாகவி பாரதி, சுவாமி விவேகானந்தர் இந்த வரிசையில் அடங்குவர். வாழ்க்கையில் சவால்கள் இயற்கையானவை. 

    அதை இளைஞர்கள் எதிர்கொள்ள தயாராக வேண்டும். மகான் அரவிந்தர், மகாகவி பாரதியார், வி.வி.எஸ்.ஐயர் போன்ற சிறந்த தலைவர்கள் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து தப்பி புதுவையில் வாழ்ந்தனர். 

    ஆங்கிலேயர்களை திகைப்படைய செய்த வ.உ.சி. புதுவைக்கு வந்து மகான் அரவிந்தரை ராஜரிஷி என்றார். பாரதியையும் சந்தித்தார். அவர் பல உண்மைகளை நான் கண்ட பாரதி என்ற நூலில் பதிவு செய்துள்ளார். 

    புதுவை ஞானபூமி, வேத பூமி என அழைக்கப்படுகிறது. புதுவை ஆன்மிக சித்தர்கள், முனிவர்கள் வாழ்ந்த தேசம். இங்கு பிரதமர் காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தது பெருமைக்குரியது. 

    அவர் அரசியல் நன்னடத்தையின் சின்னம். பள்ளி மாண வர்களுக்கு இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் நபர் காமராஜர். 

    நம் நாடு பிரதமரின் வழியில் வல்லரசு நாடாக மாறி வருகிறது. மக்கள் தொகை என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. திறமையான பணியா ளர்களை, நாட்டிற்கு பங்களிக்கும் சக்தியாக எந்த எண்ணிக்கை மாறுகிறது. 

    ஆத்மநிர்பர் பாரத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுவையிலும் இந்த மாற்றம் நடைபெறும். இந்த விழா இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி, புதிய யோசனைகள், படைப்புகளை உருவாக்க அழைத்துச்செல்லட்டும்.  நம் நாட்டு இளைஞர்கள் இந்த உலகுக்கு முன்மாதிரியாக மாற வேண்டும். நீங்கள் தேசத்தின் பெருமையாகவும், கண்ணியமாகவும் மாற வேண்டும். 

    இந்த உலகம் உங்களை உச்சத்தில் பார்க்க வேண்டும். இதை நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன். புதுவை மக்களின் நலனுக்காக தனி கவனம் செலுத்தி வரும் பிரதமருக்கு நன்றி. 

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×