என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூர் பூங்கா
முழு ஊரடங்கு - வண்டலூர்,கிண்டி சிறுவர் பூங்கா இன்று மூடப்பட்டது
வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காக்கள் இன்று மூடப்பட்டன. இதற்கு பதிலாக வார விடுமுறை தினமான 11-ந் தேதி பூங்கா திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காக்கள் இன்று மூடப்பட்டன. இதற்கு பதிலாக வார விடுமுறை தினமான 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பூங்கா திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கொரோனா வழிகாட்டும் முறையை பின்பற்றி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிண்டி சிறுவர் பூங்காவுக்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படுவது வழக்கம். இன்று ஊரடங்கால் மூடப்பட்டதால் நாளை மறுநாள் சிறுவர் பூங்கா திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






