என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்குணம் கிராமத்தில் கொரோனோ விழிப்புணர்வு கானொளியை பார்வையிடும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள்.
கொரோனோ விழிப்புணர்வு கானொலி
பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடர்ந்து ஆய்வு செய்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் முருகன் கோவில் மலைக்கு கிழக்கு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது பெரம்பலூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலகம் மூலம் எல்.இ.டி. வேன் மூலம் கொரோனோ பரவல் தடுப்பு நடிவடிக்கை குறித்தும், பாதுகாப்பாக இருக்க வேண்டியது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுதல் மற்றும் கொரோனோ விதிமுறையை அனைவரும் கடைபிடிக்கவேண்டும் போன்றவை குறித்த காணொலி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இதில் 100 நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளர் கலைச்செல்வி உட்பட கூலித்தொழிலாளர்கள் பலரும் பார்த்து தகவல்களை தெரிந்து கொண்டனர்.
Next Story






