என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
புதுவை அரசு பள்ளியில் வருகிற 19-ந்தேதி மாதிரி தேர்வு நடைபெறும்.
புதுச்சேரி:
திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர், கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளை மூடக்கூடாது. தொடர்ந்து பள்ளிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 19-ந்தேதி முதல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்படும். வழக்கமாக தமிழக கல்வித்துறையின் வினாத்தாள் மூலம் தேர்வு நடத்துவோம். இந்த ஆண்டு புதுவையிலேயே தயாரிக்கப்பட்ட வினாத்தாள் அடிப்படையில் மாதிரி தேர்வு நடத்தப்படும்.
பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை மூடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். பொதுத்தேர்வுகள் நடைபெறாதபட்சத்தில் இந்த மாதிரி தேர்வு கணக்கில் கொள்ளப்படும். 3 மாதத்துக்கு ஒரு முறை மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






