search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவையில் 1 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை-கவர்னர் தமிழிசை தகவல்

    புதுவையில் 1 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று கவர்னர் தமிழிசை கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. புதுவை வாணரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் மாண வர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சுகாதாரதுறையை பாராட்டுகிறேன். புதுவையில் 82 சதவீதம் பேர் முதல் தவணையும், 58 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இன்னும் 1 லட்சம் பேர் தடுப்பூசி போட வேண்டும். 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்களை பார்த்து பயந்த, திட்டிய பெரியவர்களை பார்த்துள்ளோம். ஆனால், இளைஞர்கள் ஒருவர்கூட மறுக்கவில்லை. பெரியவர்களை விட இளையவர்கள் மிக பொறுப்பானவர்கள். கொரோனா இல்லாத காலத்தில் இந்த இளைஞர்கள் வாழ வேண்டும். 

    விழாவில் பூக்கொத்து கொடுக்காமல் தேவையான புத்தகங்களை அளித்திருப்பது பாராட்ட தக்கது. தடுப்பூசியுடன் சத்தான உணவு அவசியம். பீசா, பர்கரில் சத்து இல்லை. நவ தானியம் சாப்பிடுங்கள். கேரட்டை கடித்து சாப்பிடுங்கள். எலுமிச்சை சாறு குடியுங்கள். ரூ.150 கோடிக்கு மேல் நம் நாட்டில் தயாரித்த தடுப்பூசியை பெருமையுடன் கூற வேண்டும். தெலுங்கானாவில் உள்ள பையோடெக் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    24 மணி நேரமும் ஆராய்ச்சியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பிரதமர் நேரில் சந்தித்து ஊக்கமளித்தார். நாம் அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.  அன்றைய பாடத்தை அன்றே படியுங்கள். மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களாக வர வேண்டும். எந்த காரணத்திற்கும் மகிழ்ச்சியை தொலைக்காதீர்கள். கஷ்டத்தை ஆசிரியர்களிடம் கூறுங்கள். பெரியவர்கள் தடுப்பூசிக்கு  பயந்து ஓடினார்கள். குழந்தைகளில் சுணக்கம் இல்லை. இனி பெரியவர்கள் தடுப்பூசி போட மாட்டேன் என்பது மன்னிக்க கூடியதில்லை. 

    பல மாநிலங்களில் வேகமாக நோய் பரவுகிறது. தடுப்பூசி போட்டவர்களை தொற்று அபாயகரமாக தாக்குவதில்லை. புதுவையில் தேசிய இளைஞர் விழாவை காணொலியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பள்ளி மாணவர்களின் அக்கறையில்  ஜாக்கிரதையாக இருக்கிறோம். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பள்ளிகளை மூடுவது குறித்து முடி வெடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×