என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குட்கா விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது- எஸ்.பி. தீபா சத்யன் எச்சரிக்கை
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் தலைமை காவலர் நித்தியானந்தம் முதல்நிலைக் காவலர் மணிகண்டன் ஆகியோர் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ரோந்து மற்றும் கடைகளில் ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது வாலாஜா நரோசிஜி ராவ் தெருவில் இயங்கி வரும் ஒரு மளிகை கடையில் ஆய்வு செய்த போது சட்டத்திற்குப் புறம்பாக மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ஜீவாராம் (21) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் தெரிவித்ததாவது ராணிப்பேட்டை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை தொழிலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.






