என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் வந்த வீரர், வீராங்கனைகளுக்கு பெரம்பலூரில் வரவேற்பளிக்கப்பட்டது.
கபடி போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு வரவேற்பு
தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான கபடி போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்: தெற்காசிய நாடுகளுக்கிடையேயான கபடி போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பெரம்பலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கதேச தலைநகரான டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான கபடி போட்டியில், 19 வயதினருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவிலும் பங்கேற்ற இந்திய அணி தங்கம் வென்றது. இந்த அணியில் விளையாடிய வீரர்களில் ஆண்கள் பிரிவில் 3 பேரும், பெண்கள் பிரிவில் 4 பேரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்திய இளையோர் விளையாட்டுக் கழகம் சார்பில், தெற்காசிய நாடுகளுக்கிடையேயான கபடி போட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட வீரர்களில் பெண்கள் அணியில் இடம்பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தைச்சேர்ந்த திவ்யா, பிரியதர்ஷினி, கௌசிக்பிரபா, கௌசல்யா ஆகியோரும், ஆண்கள் அணியில் இடம்பெற்ற சாகிர் அகமது, புண்ணிய மூர்த்தி ஆகியோரும் பெரம்பலூர் வந்தனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர் அகமது இக்பால் தலைமையில், கட்சி நிர்வாகிகள் வீரர், வீராங்கனைகளுக்கு பொன்னாடை அணிவித்தனர். மேலும், பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
Next Story






