என் மலர்
உள்ளூர் செய்திகள்

GOWTHAM
கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்பு
ஜெயங்கொண்டம் அருகே புத்தாண்டு கொண்டாட சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் இன்று காலை பிணமாக மீட்கப்பட்டார்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக மூன்று இளைஞர்கள் குளித்துவிட்டு ஆற்றை கடந்து சென்றனர். அப்போது துறையூரைச் சேர்ந்த வள்ளுவர்&சித்ரா தம்பதியின் மகன் கௌதம் (வயது 25) என்ற வாலிபர் கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கோழிப்பண் ணையில் அவர் வேலை பார்த்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேலையை முடித்து நண்பர்களுடன் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்கு சென்றிருந்தார்.
தற்போது கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்த காரணமாக ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் நீச்சல் தெரியாத காரணத்தினாலும் நண்பர்கள் கண் முன்னே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
கடந்த 2 நாட்களாக தீயணைப்பு துறை அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தா.பழூர் காவல் துறையினர் கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போன கௌதமை ரப்பர் படகு மூலமும், பாதுகாப்பு உடை அணிந்து கரை ஓரங்களிலும் தீவிரமாக இரண்டாவதாக நாளாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் இரவு போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. மூன்றாவது நாளாக இன்று காலை அவரது உடல் கொள்ளிடம் கூட்டு குடிநீர் நீரேற்று நிலையம் அருகே சுமார் 100 மீட்டர் தொலைவில் ஆற்றில் மிதந்த நிலையில் கௌதம் உடலை மீட்டனர்.
Next Story






