என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு பீர் பாட்டில் குத்து
    X
    நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு பீர் பாட்டில் குத்து

    நடுரோட்டில் மது குடித்ததை தட்டிக்கேட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு பீர் பாட்டில் குத்து

    புதுவை முதலியார்பேட்டை அருகே நடுரோட்டில் மது குடித்ததை தட்டிக்கேட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை இந்திராநகர் நேரு வீதியை சேர்ந்தவர் வேலவன் (வயது30). இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில பாசறை செயலாளராக உள்ளார்.

    நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வேலவன் கட்சி பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் நடு ரோட்டில் நின்று மது குடித்துக்கொண்டிருந்தனர். இதனை வேலவன் தட்டிக்கேட்டு வீட்டுக்கு செல்ல வழி விடுமாறு அந்த கும்பலிடம் கேட்டார்.

    அதற்கு அந்த கும்பல் இப்போது வழி விடமுடியாது? உன்னால் என்ன செய்யமுடியும் என கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் வேலவனை குத்தினர்.

    மேலும் கீழே கிடந்த கற்கள் மற்றும் கட்டையால் வேலவனை சரமாரியாக தாக்கினர். அதோடு வேலவனின் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

    மேலும் கொலை செய்து விடுவதாக அந்த கும்பல் மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டது.

    இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வேலவன் தனது நண்பர்களுக்கு போன் செய்து அவர்கள் உதவியுடன் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து வேலவனின் தந்தை முனியன் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×