என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்கள்
    X
    புகையிலை பொருட்கள்

    விருதுநகர் மாவட்டத்தில் ரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

    விருதுநகர் மாவட்டத்தில் ரூ.6 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலை  பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இதில் ஒரு பகுதியாக கடந்த ஒரு வாரமாக போலீசார் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சம்பவத்தன்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். 

    அவரை மறித்து போலீசார் சோதனை செய்தபோது ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை  பொருட்களை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ராஜபாளையம் தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் 4 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது ராஜபாளையம் டீச்சர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மூடை மூடையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்து. இதன் மதிப்பு ரூ 5. லட்சத்து 89 ஆயிரம் ஆகும்.

    போலீசார் அதனை பறிமுதல் செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த தென்காசியை சேர்ந்த அய்யனார், ராஜபாளையத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×