என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண் மாயம்
விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண் மாயம்
விருதுநகர் அருகே விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சத்திர ரெட்டியபட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 40). இவரது மனைவி 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் சரண்யா (19). இவர் கல்லூரியில் படித்து வந்த நிலையில் குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சரண்யா பாதியிலேயே கல்லூரி படிப்பை கைவிட்டார்.
இந்தநிலையில் சரண்யா அடிக்கடி ஒருவரிடம் பேசி வந்துள்ளார். இதை அறிந்த குமார் மகளை கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சரண்யா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பினாயில் குடித்து மயங்கி னார்.
உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சரண்யா ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






