என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை நகராட்சியில் பசுமை தீர்ப்பாய கண்காணிப்புக்குழு தலைவர் ஜோதிமணி ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
பிளாஸ்டிக் பொருட்களை சாலை பணிக்கு பயன்படுத்த வேண்டும் - தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்புக்குழு தலைவர்
மக்காத குப்பைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சாலை பணிகளுக்கு பயன்படுத்துமாறு மாநில பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு தலைவர் வலியுறுத்தினார்.
ஆற்காடு:
ஆற்காடு நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள், ஆற்காடு வீட்டுவசதி வாரியம் பகுதி 1-ல் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நடக்கிறது. இதனை மாநில திடக்கழிவு மேலாண்மைக்குழு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஜோதிமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மக்காத குப்பைகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சாலைப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கழிவுநீர் பாலாற்றில் கலப்பதால் குடிநீர் மாசு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஜே. எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் குபேந்திரன், ஆற்காடு நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதேபோன்று ராணிப்பேட்டை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளையும் பசுமை தீர்ப்பாய கண்காணிப்புக்குழு தலைவர் ஜோதிமணி ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன், நகராட்சி நிர்வாக செயற்பொறியாளர் கமலநாதன், மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர் ரவிச்சந்திரன், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், துப்புரவு அலுவலர் அப்துல் ரஹீம், துப்புரவு ஆய்வாளர் தேவிபாலா மற்றும் வேலூர், வாலாஜா, ஆற்காடு ஆகிய நகராட்சிகளின் ஆணையாளர்களும், பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களும் உடனிருந்தனர்.
Next Story






