என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் சந்திரபிரியங்கா
பெண்கள் இலவச பயணத்துக்கு ‘பிங்க்’ கலர் அரசு பஸ்- அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவிப்பு
பஸ் நிறுத்தங்களில், பஸ்களில் கேமரா பொருத்தவும், ஜி.பி.எஸ். இணைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு என் துறைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வழிகாட்டுதலில் பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை துறைகளில் முன்னெடுத்துள்ளோம்.
போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் உரிமம் பெற வசதியாக சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக இத்திட்டம் புதுவையில் செயல்படுத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் உரிமம் பெற சிறப்பு முகாம் நடத்தப்படும்.
புதுவை சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) 164 பஸ்கள் உள்ளது. 90 பஸ்கள் மட்டுமே இப்போது இயக்கப்படுகிறது. பழுது காரணமாக மற்ற பஸ்கள் இயக்கப்படவில்லை. சிறிய பழுதடைந்த பஸ்களை சீரமைத்து கூடுதலாக இயக்கி வருகிறோம்.
கொரோனா காலத்தில் 10 வால்வோ பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த நிறுவனம் மூலம் குறைந்த செலவில் சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வால்வோ பஸ்களை சீரமைக்க அதிக செலவானால் அவற்றை அந்த நிறுவனத்திடமே கொடுத்து புதிய பஸ்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும். பி.ஆர்.டி.சி.யில் டிக்கெட் பரிசோதகர்கள் குறைவாக உள்ளனர்.
இதனால் தமிழக அரசு நிறுவனத்தோடு இணைந்து பஸ்களை பரிசோதிக்க அனுமதி பெற்றுள்ளோம். பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்ததால் பி.ஆர்.டி.சி. பஸ்கள் முறையாக இயக்கப்பட்டு வருமானம் முன்பைவிட இருமடங்கு உயர்ந்துள்ளது. பி.ஆர்.டி.சி.யை மீண்டும் லாபகரமாக இயக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மூலம் புதிதாக 200 பஸ்களை வாங்க திட்டமிட்டுள்ளோம். பெண்களுக்கு தனியாக ‘பிங்க்’ கலர் பஸ் இயக்க முடிவு செய்துள்ளோம். மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெண்கள் இலவச பஸ் பயணம் செல்கின்றனர். அதேபோல ‘பிங்க்’ பஸ் இயக்கப்படும்போது பெண்கள் இலவசமாக பயணிக்க அறிவிப்பு வெளியிடுவோம்.
பஸ் நிறுத்தங்களில், பஸ்களில் கேமரா பொருத்தவும், ஜி.பி.எஸ். இணைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பி.ஆர்.டி.சி. ஊழியர்களின் 5 மாத நிலுவை சம்பளம் வழங்கியுள்ளோம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story