என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்காடு அருகே இளைய மதுக்கூடம் கிராமத்தில் சேதமடைந்த பாலத்தை படத்தில் காணலாம்.
    X
    திருவெண்காடு அருகே இளைய மதுக்கூடம் கிராமத்தில் சேதமடைந்த பாலத்தை படத்தில் காணலாம்.

    இளைய மதுக்கூடம் கிராமத்தில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் - கலெக்டருக்கு கோரிக்கை

    இளைய மதுக்கூடம் கிராமத்தில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவெண்காடு:

    திருவெண்காடு அருகே ராதாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட இளைய மதுக்கூடம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் செல்லும் வாய்க்காலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த பாலம் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து ராதாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அகோரம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவை நேற்று நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    இளைய மதுக்கூடம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான வாய்க்கால் பாலம் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பாலத்தின் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்காடு, ராதாநல்லூர், சாவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த பாலத்தின் வழியாக தான் செல்ல வேண்டும். எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டித்தர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×