என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேனர், சென்னை உயர்நீதிமன்றம்
    X
    பேனர், சென்னை உயர்நீதிமன்றம்

    விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்வதில்லை என்றால் மட்டும் போதாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    விழுப்புரத்தில் அமைச்சரை வரவேற்பதற்காக சாலையில் தி.மு.க. கட்சி கொடி நடும்போது, சிறுவன் பிடித்த இரும்பு கொடி கம்பம் மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதால் சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    மேலும், பேனர் வைக்கும் நிகழ்ச்களில் முதல்வர் கலந்து கொள்வதில்லை என்றால் மட்டும் போதாது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக பேனர் வைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றனர்.
    Next Story
    ×