search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான மாயியையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் படத்தில் காணலாம்.
    X
    கைதான மாயியையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் படத்தில் காணலாம்.

    காங்கயம் பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்த தொழிலாளி கைது

    காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    காங்கயம்:

    காங்கயம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் டி.எஸ்.பி. குமரேசன் மேற்பார்வையில் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

    அப்போது சிக்கரசம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தேங்காய் களத்தில் கூலி வேலை செய்து வந்த மாயி ( வயது 54) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்தி கொண்டு பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் மாயியை மடக்கி பிடித்தனர். 

    பின்னர் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 11 ஆயிரம் பணம், கஞ்சா கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் விசாரித்த போது அவர் காங்கேயம் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா சப்ளை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×