என் மலர்
செய்திகள்

காங்கயம் நகராட்சி
பணிகளில் தொய்வு-காங்கயம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமிக்க வேண்டுகோள்
காங்கயம் நகரத்தில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு சாக்கடைக்கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
காங்கயம்:
காங்கயம் நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த முத்துகுமார் கடந்த வாரம் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் பின்னர் தற்போது வரை காங்கயம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமிக்கப்படவில்லை.
புதிய ஆணையராக கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் பணியாற்றி வரும் அலுவலர் ஒருவர் பொறுப்பேற்கவுள்ளார் என கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக காங்கயம் பகுதியில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக காங்கயம் நகரத்தில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு சாக்கடைக்கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது சில நாட்களாக இந்தப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளன.
மேற்பார்வையிட பிரதான அலுவலர் இல்லாததால் இந்த பணிகள் எப்போது தொடர்ந்து நடைபெறும் என தெரியவில்லை.எனவே உடனடியாக காங்கேயம் நகராட்சிக்குஆணையாளர் நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






