search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தக்கலையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 170 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது

    தக்கலை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 170 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீசாரின் அதிரடி வேட்டையின் காரணமாக தற்போது கஞ்சா மற்றும் குட்கா விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவி‌ஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அழகிய மண்டபம் பகுதியில் குட்கா புகையிலை விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தார். போலீசார் அவரை சோதனை செய்தபோது அவரிடம் குட்கா புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் அழகிய மண்டபத்தை சேர்ந்த முகமது ஷாபி (வயது 54) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் அவரிடம்விசாரணை மேற்கொண்டபோது அழகிய மண்டபம் பகுதியில் வாடகை வீட்டில் குட்கா புகையிலை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று வீட்டில் சாக்கு மூட்டையில் பதுக்கி வைத்திருந்த குட்கா புகையிலை பறிமுதல் செய் தனர்.

    மேலும் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள வீட்டிலும் குட்கா புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை அடுத்துபோலீசார் அங்கு சென்று சோதனை மேற் கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த குட்கா புகையிலை பறிமுதல் செய்தனர். மொத்தம் 170 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முகமது ஷாபி குட்கா புகையிலையை எங்கிருந்து விற்பனைக்கு வாங்கி வந்தார்.இதற்கும் வேறு நபர்களுக்கு தொடர்புஉண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×