என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    சோளிங்கர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

    சோளிங்கர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் நேற்று இரவு திருட்டு கும்பல் உண்டியல் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிசென்றனர்.

    இதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கொண்டபாளையம் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். பிள்ளையார் கோவிலில் மாதம் ஒருமுறை உண்டியலை திறப்பார்கள். அப்போது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை காணிக்கை பணம் இருக்கும். அந்த பணத்தை கொண்டு கோவில் பழுதுபார்த்தல், சிறப்பு பூஜைகள் போன்ற பணிகள் மேற்கொள்வது வழக்கம்.

    இந்த நிலையில் 10 மாதங்களாகியும் உண்டியல் பணம் திறக்கப்படாமல் இருந்தது குறிபிடத்தக்கது.
    Next Story
    ×