என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள்
    X
    விவசாயிகள்

    திருப்பூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-26ந்தேதி நடக்கிறது

    கூட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பது குறித்த தகவல்கள் வழங்கப்படும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 26-ந் தேதி, காலை 10 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள அறை எண் 20ல் நடக்கிறது.விவசாயிகள், மாவட்ட கலெக்டரிடம் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க வேளாண் அலுவலர், தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளை கொண்ட வேளாண் உதவி மையம், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்படுகிறது.

    இந்த மையத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு  நுண்ணீர் பாசனம் அமைப்பது குறித்த தகவல்கள் வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு  நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து தரப்படும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Next Story
    ×