என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை வெள்ள நீரில் ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் மதுப்பிரியர்கள்
    X
    மழை வெள்ள நீரில் ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் மதுப்பிரியர்கள்

    மழை வெள்ளத்தை கடந்து மதுக்கடைக்கு ஆபத்தான நிலையில் செல்லும் மதுப்பிரியர்கள்

    வயதானோர் மற்றும் மதுபோதையில் இருப்பர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தபடி ஆபத்தான முறையில் வந்து மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள கனகம்மாசத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வெளிவரும் மழைநீர் மற்றும் ஏரிகளின் உபரிநீர் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக செல்லும் ஓடை வழியாக புதூர் கிராமம் அருகே கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

    தற்போது பெய்து வரும் கனமழையால் கனகம்மாசத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வரும் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து அப்பகுதியில் ஓடுகிறது. இந்த நிலையில் கனகம்மாசத்திரம் பகுதியில் உள்ள மதுபான கடையில் மது வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் ஏராளமானோர் உபரிநீர் வரும் ஓடையில் மழை வெள்ளத்தை கடந்து ஆபத்தாக வருகிறார்கள்.

    வயதானோர் மற்றும் மதுபோதையில் இருப்பர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தபடி ஆபத்தான முறையில் வந்து மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். ஏராளமானார் மீண்டும் தண்ணீர் வரவேண்டாம் என்று நினைத்து அதிகமான மது பாட்டில் கைளை வாங்கி அதனை கட்டி அணைத்து தள்ளாடியபடி கரையை கடக்கின்றனர்.

    Next Story
    ×