என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    போதைக்கு வலி மாத்திரை-மருந்து கடைகளுக்கு எச்சரிக்கை

    ஒரே டாக்டர் மருந்து சீட்டை பயன்படுத்தி பல கடைகளில் மாத்திரை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.
    உடுமலை:

    சமீபகாலமாக இளைஞர்கள் சிலர் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் டாக்டர் அறிவுரை இல்லாமல் மருந்துகள் வழங்க கூடாது. 

    ஒரு மருந்தை தொடர்ந்து ஒருவர் வாங்கினால்அவரின் பெயர் முகவரி மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்ளவும் மருந்து கடைக்காரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இருப்பினும் சிலர் ஒரே டாக்டர் மருந்து சீட்டை பயன்படுத்தி பல கடைகளில் மாத்திரை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட வலி நிவாரண மருந்துகளை அதிகமாக பயன்படுத்தும் மருந்து கடைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து திருப்பூர் மருந்தக ஆய்வாளர்கள் கூறுகையில், 

    டாக்டர் சீட்டின்றி வலி மாத்திரைகள் கொடுக்ககூடாது. ஆய்வின் போது சிலர் போலியாக டாக்டர் பரிந்துரை சீட்டு வழங்கி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

    எனவே டாக்டர் சீட்டு நம்பகத்தன்மையை மருந்து கடைக்காரர்கள் ஊர்ஜிதப்படுத்த வேண்டும். விதி மீறி மருந்துக்கடைகள் செயல்பட்டால் பூட்டி சீல் வைக்கப்படும் என்றனர். 
    Next Story
    ×